சமீப காலமாக செயற்கை வளர்ச்சி அபாரமாக உயர்ந்துள்ளது.
இதனால் நன்மைகள் இருந்தாலும், மக்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மக்கள் அன்றாட வாழ்வியலில் மக்கள் வேலை பளுவை குறைக்க அத்தியாவாசியமான ஒன்றாக மாறியுள்ளது.
குறிப்பாக, இது வேலை செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோரால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
மனிதர்களால் பல நாட்கள் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரங்களில் தன்னிச்சையாக செய்து முடிப்பதால், மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர்.
இந்த நிலையில், The Future of Skills Landscape 2024 Artificial Intelligence குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பம் ஊழியர்கள் மத்தியில் தங்கள் பணிகள் குறித்து கலக்கம் ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் என சுமார் 2 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 78 சதவீதம் பேர் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால், நிச்சயமாக மக்களின் வேலை வாய்ப்புகளை AI தொழிழ்நுட்பம் பறிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.