அவுஸ்திரேலியாவை புயல்வேகத்தில் சாய்த்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

பிரிஸ்பேனில் நடந்த பிங்க் பந்து டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி The Gabba மைதானத்தில் நடந்தது.

வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 311 ரன்களும், அவுஸ்திரேலியா 289-9 (டிக்ளேர்) ரன்களும் எடுத்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் அவுஸ்திரேலியா அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் கவாஜாவை 10 ரன்னில் அல்சரி ஜோசப் வெளியேற்றினார். மார்னஸ் லபுஷேனை 5 ரன்னில் கிரேவிஸ் ஆட்டமிழக்க செய்தார்.

அதன் பின்னர் ஸ்டீவன் ஸ்மித் உடன் கேமரூன் கிரீன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர்கள் கூட்டணி 71 ரன்கள் சேர்த்தது.

ஷாமர் ஜோசப் பந்துவீச்சில் 42 ரன்கள் எடுத்திருந்த கிரீன் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஷாமர் பந்துவீச்சில் அவுஸ்திரேலியா சரிவுக்குள்ளானது.

ஸ்மித் மட்டும் தனியாளாக போராட, ஏனைய வீரர்கள் ஆட்டமிழந்ததால் அவுஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதாவது பிங்க் பந்து டெஸ்டில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் அணி வெஸ்ட் இண்டீஸ் தான்.

அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 91 ரன்கள் எடுத்தார். ஷாமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் ஷாமர் ஜோசப் வென்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!