புகழ்பெற்ற கோல்டன் குளோப் விழாவிற்கு மேகன் மெர்க்கல் வராதது ஏன்?

அமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் மேகன் மெர்க்கல் கலந்துகொள்ளாதது குறித்து காரணம் தெரிய வந்துள்ளது.

81வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் Bevery Hills-யில் நடைபெற்றது.
இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஒபென்ஹெய்ம்ர் திரைப்படம் பல பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது.

இந்த விழா மேடையில் பேட்ரிக் ஜே.ஆடம்ஸ், ஜினா டோரஸ், சாரா ராபர்ட்டி மற்றும் கேப்ரியல் மாச்ட் ஆகியோர் மீண்டும் இணைந்தனர்.

ஆனால், இளவரசி மேகன் மெர்க்கல் இவ்விழாவில் பங்கேற்கவில்லை. அவர் பிஸியாக இருந்ததாக கூறப்பட்டது.

இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. ஜினா டோரஸ் தங்களிடம் மேகனின் எண் எங்களிடம் இல்லை. ஆதலால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும் அவர் இதனை பார்ப்பார், விழாவை காண்பார். நாங்கள் இங்கே இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைவார் என தெரிவித்தார்.

அதேபோல் கோல்டன் குளோப் தரப்பில், ”நாங்கள் டச்சஸைக் கேட்டோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் முன்னதாகவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளால் வரமுடியாது என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

விழாவில் மேகன் மற்றும் ஹாரியை தொகுப்பாளர் ஜோ கோயால் அவர்களை கேலி செய்தார்.

அவர் விருதுகளை பெற்ற Successionதொடர் குறித்து கூறும்போது, ‘Succession-க்கு 9 பரிந்துரைகள் உள்ளன. அது பணக்கார,வெள்ளை, செயலிழந்த குடும்பத்தைப் பற்றிய ஒரு சிறந்த தொடர்…ஓ! இருங்கள், அது தான் கிரீடம். மன்னிக்கவும். ஹரியும் மற்றும் மேகன் மெர்க்கல் ஒன்றும் செய்யாமல் மில்லியன் கணக்கில் பணம் பெற்றார்கள்; அதுவும் Netflix மூலம் தான்’ கிண்டல் செய்தார்.

மேலும், மேகன் ஏதேனும் Suits Projects-யில் தோன்றுவாரா என்று கேட்டதற்கு, ”நிச்சயமாக. மைக் மற்றும் ரேச்சல் சியாட்டலில் இருக்கிறார்கள். அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வர வேண்டும். அவர்கள் சில விடயங்களை சரி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!