ஏன் மனுவை தாக்கல் செய்தீர்கள்? வாபஸ் வாங்கிய மன்சூர் அலிகானை கண்டித்த நீதிமன்றம்

மன்சூர் அலிகான் அளித்த முன்ஜாமீன் மனுவில் தவறான காவல் நிலையத்தினை குறிப்பிட்டதால் மனுவை திரும்ப பெற கோரியதற்கு நீதிமன்றம் கண்டித்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அவரது பேச்சு பலரிடமும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் பெற்றது.
அதன் தொடர்ச்சியாக நடிகை திரிஷா தனது X தளத்தில் இனி மன்சூர் அலிகானுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் பரிந்துரைத்தது.
அதன் பொருட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரியிருந்தார். இவ்வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.அல்லி முன்பு வாதத்திற்கு வந்த நிலையில், மன்சூரின் வழக்கறிஞர் மனுவை திரும்ப பெறுவதாக கூறினார்.
ஏன் மனுவை தாக்கல் செய்தீர்கள்? ஏன் திரும்ப பெறுகிறீர்கள்? என்று நீதிபதி கேட்டபோது, எதிர் மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ப்பதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்துள்ளதால் மனுவை திரும்ப பெறுவதாக கூறினார்.
இதனை கேட்ட நீதிபதி l, “இது நீதிமன்றம், இது ஒன்றும் விளையாட்டு மைதானம் இல்லை , நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காதீர்கள்” என கண்டித்துள்ளார்.
இதனால் மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!