சென்னையில் சுட்டெரிக்கும் வெப்பம்!

Thermometer Sun 40 Degres. Hot summer day. High Summer temperatures

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

அக்னி நட்சத்திரம் முடிந்ததை அடுத்து சென்னையில் வெப்பநிலை டெல்லியை விட ஆபத்தான அளவுக்கு இருப்பதாக தனியார் வானிலை அறிவிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவத்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போது தென் சென்னையில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது.

கிழக்குக் கடற்கரை சாலையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் காற்றில் ஈரப்பதம் 69% ஆகவும் உள்ளது. உண்மையில் இந்த வெப்பநிலை 63 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உள்ளது” எனக் கூறியுள்ளார்.

“இது டெல்லியைவிட சென்னையின் நிலைமை ஆபத்தாக இருப்பதைக் காட்டுகிறது. டெல்லியில் இப்போது 25% ஈரப்பதத்துடன் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது” எனவும் தெரிவித்திருக்கிறார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!