பிரித்தானியா தேர்தலில் யாருக்கு வெற்றி? அதிர வைக்கும் கருத்துக்கணிப்பு

பிரித்தானியாவில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான Find Out Now and Electoral Calculus, சமீபத்தில் பிரித்தானியாவில் உள்ள 18,000 பிரித்தானியர்களிடம் வரும் பொதுத்தேர்தல் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

இதில், ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு 22% பேர் மட்டுமே தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த கட்சியை சேர்ந்த வெறும் 80 பேர் மட்டுமே தங்கள் பதவியை தக்கவைத்துக்கொள்வார்கள். இந்த முறை கன்சர்வேடிவ் கட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

இதனால், பிரித்தானியா வரலாற்றில் மிக மோசமான தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதேசமயம் கேர் ஸ்டாமரின் லேபர் கட்சிக்கு 42% பேர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. இதன் மூலம் வரும் பொதுத்தேர்தலில் இந்த கட்சி 452 என்ற மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரித்தானியா ஊடகங்கள் பல, கேர் ஸ்டாமரை அடுத்த பிரதமர் என்று அழைத்து வருகின்றன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!