லட்சக்கணக்கான Account-களை தடை செய்த வாட்ஸ்அப்! வெளியான அறிக்கை

கடந்த ஆண்டில் மட்டும் 69 லட்சம் Account-களை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்ததாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் சுமார் 500 மில்லியனுக்கும் பயனர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ்அப் விளங்குகிறது.

ஆனால், கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 1 முதல் 31 வரை 69,34,000 Account-களை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது.

இவற்றில் 16,48,000 Accounts பயனர்களிடம் இருந்து புகார் வரும் முன்பே தடை செய்யப்பட்டதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் தளத்தில் முறைகேடுகளை வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.

“Accounts Actioned” என்பது பயனர்கள் reports அடிப்படையில் சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

அதன்படியே இந்த Accounts தடை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் தங்கள் நடவடிக்கைகள் குறித்து கூறுகையில்

“எங்கள் பயனர்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்தைத் தடுப்பதிலும், எதிர்த்து போராடவும் மற்றும் end-to-end Encrypted message service வழங்குவதிலும் நாங்கள் முன்னணியில் உள்ளோம்” என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் Grievance Appellate Commitee ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவானது பாரிய டெக் நிறுவனங்களை கட்டுப்படுத்த, நாட்டின் டிஜிட்டல் சட்டங்களை வலுப்படுத்த மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமைக்கப்பட்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!