“தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” ரிஷி சுனக்!

பிரிட்டன் நாட்டில் நேற்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை அமைக்கிறது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

பிரிட்டன் நாட்டில் நேற்றைய தினம் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இதில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், ரிஷி சுனக் தனது கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தப் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்காக அக்கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மரை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். அதிகாரம் அமைதியாகவும் சட்டப்பூர்வமான முறையிலும் கைமாறும்.

நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலத்தில் நாம் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த தோல்விக்கு கன்சர்வேடிவ் கட்சியினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” என்றார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!