கேக் விற்பனைக்கு என்ன நடந்தது?

இலங்கையில் இம்முறை பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரித்ததன் காரணமாகவும் கேக் விற்பனை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு நத்தார் பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை 25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கப்பெறாத பட்சத்தில், உள்நாட்டு முட்டைகளை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்து தயாரிக்கப்படும் கேக்கின் விலையை குறைப்பது என்பது சாத்தியமற்றது எனவும் அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்..

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!