தீபாவளியன்று என்ன வாங்கினால் செல்வம் பெருகும்?

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக தன திரயோதசி திதி தொடங்குகிறது. இந்த தீபாவளியன்று 12 ராசிக்காரர்களும் மங்களகரமான பொருட்கள் வாங்கினால் அடுத்த ஒரு வருடத்திற்கு வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் வாய்ப்புகள் அதிகமாகும்.
மேஷம்:
வெள்ளி நாணயம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கலாம். தங்கம் மற்றும் பித்தளைப் பொருட்கள் வாங்கினால் மங்களம் தரும்.
ரிஷபம்:
சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதி ஆவார். ஆதலால் வெள்ளி பொருட்கள் வாங்குதல் நலம் பயக்கும். வைரம் பதித்த நகைகள் வாங்கலாம்.
மிதுனம்:
வெண்கல பாத்திரங்கள், தங்க நகைகள் வாங்கலாம். மரகதம் பதித்த நகைகள் வாங்குவது முன்னேற்றத்தை தரும்.
கடகம்:
வெள்ளி நகைகள் வாங்குவது சிறந்தது. வெள்ளியில் லட்சுமி, விநாயகர் சிலைகள் வாங்கி வணங்கி வருதல் சிறப்பு.
சிம்மம்:
தங்கம் வாங்குவது சாலச்சிறந்தது. தங்கம் வாங்க இயலாமல் போனால் தங்கமுலாம் பூசப்பட்ட பொருட்கள் வாங்கலாம்.
கன்னி:
வெண்கலப் பொருட்கள் மற்றும் பூந்தொட்டிகள் வாங்குவது நல்ல பலன் தரும். உங்கள் அதிர்ஷ்ட ராசிக்கல் மரகதம். மரகதம் பதித்த ஆபரணங்கள் வாங்கலாம்.
துலாம்:
உங்கள் ராசிக்கு சுக்கிரன் அதிபதியாக இருப்பதால் வெள்ளியிலான பொருட்கள் வாங்குவது நன்மை பயக்கும்.
விருச்சிகம்:
செவ்வாய் பகவான் ஆதிக்கத்தில் நீங்கள் இருப்பதால் செப்புப் பாத்திரங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்குவது நலம் தரும்.
தனுசு:
தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் மற்றும் பித்தளைப் பொருட்கள் வாங்கலாம்.
மகரம்:
இரும்பு பொருட்கள் வாங்குதல் நலம். வாகனங்கள் வாங்குவது முன்னேற்றத்தை கொடுக்கும்.
கும்பம்:
இரும்பு பொருட்கள், இரும்பு பாத்திரங்கள் வாங்கலாம். தங்கம்,வெள்ளியில் ஆபரணங்கள் வாங்கலாம்.
மீனம்:
உங்கள் ராசிக்கு தீபாவளியன்று தங்கம் அல்லது பித்தளைப் பொருட்கள் வாங்கினால் நன்மை உண்டு.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024