நலன்புரி மேன்முறையீடு – களத்தில் கிராம உத்தியோகத்தர்கள்

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்ட மேன்முறையீட்டு செயற்பாட்டையும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைபடுத்தவும் கிராம உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது.
பாராளுமன்ற வழிவகைகள் குழுவின் 18வது அமர்வு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தலைமையில்  இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீட்டு நடைமுறை மற்றும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் கிராம உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முதலில் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக உத்தியோகத்தர்களின் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுடன் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்கள் நடத்தும் கலந்துரையாடல்களுக்கான வசதிகளைச் செய்துகொடுக்கத் தேவையான ஒருங்கிணைப்பை வழங்குவதற்கு வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அஸ்வெசும திட்டத்துடன் இணைந்து செயற்படுவதில் கிராம உத்தியோகத்தர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அஸ்வெசும கடமையை நிறைவேற்றும்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு தேவையான சட்ட ரீதியான பாதுகாப்பு, பணிப் பொறுப்புகளுக்கான காலக்கெடு, அலுவலர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  ஆகியவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!