வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!

உலகில் பெரும்பாலானோருக்கு உடல் எடையைக் குறைப்பது முதன்மையான நோக்கமாக உள்ளது. ஏனெனில் அந்த அளவில் உடல் பருமனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தாலும், அனைவராலுமே டயட்டுகளை பின்பற்ற முடியாது.

இங்கு ஒருவரது உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றல் குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது அந்த பானங்கள் என்னவென்பதைக் காண்போம்.

ஓம நீர்

ஓம நீர் ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். அதுவும் ஓம நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் குறையும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஓம விதைகளை சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிக்க வேண்டும்.

இஞ்சி டீ

இஞ்சி ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்ட ஒரு மூலிகை. இந்த இஞ்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயைக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடித்தால், அஜீரண கோளாறுகள் நீங்கும். அதுவும் இந்த இஞ்சி டீயை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை குறைய உதவுவதோட, வயிற்று உப்புசமும் குறையும்.

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க எளிதில் உதவி புரியும். அதுவும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும் மற்றும் உடலினுள் உள்ள அழற்சி குறையும்.

மல்லி நீர்

உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றொரு பானம் தான் மல்லி நீர். இந்த மல்லி நீர் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதற்கு மல்லி விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்கள் அனைத்துமே உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். அதற்கு இந்த பானத்தை குடிப்பது மட்டுமின்றி, ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வெயிலால் முகம் கருப்பாயிடுச்சா? அப்போ இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!