வார ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது?

ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைப் பொறுத்து வாழ்வில் நல்லது, கேட்டது அமையும்.

அந்த வகையில் இந்த வாரம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது என்பது குறித்து இங்கே காண்போம்.

மேஷம்

உங்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும் என்பதால், நீங்கள் திட்டமிட்டபடி அனைத்து வேலைகளும் முடிவடையும்.

உங்கள் வாழ்க்கை சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

உங்களுக்கு இந்த வாரம் பண விடயத்தில் சிறப்பானதாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு சவால்கள் நிறைந்த வாரமாக இருக்கும். சட்ட விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

உங்களுக்கு இந்த வாரம் பண அடிப்படையில் சற்று செலவு அதிகமாக இருக்கும். ஆனால் இறுதியில் நிதி ஆதாயங்களை பெறலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் அதிகம்.

கடகம்

வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் ஏற்றமும், இறக்கமும் ஒரு சேர இருக்கும்.

உங்களின் கடின உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். மன அழுத்தத்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சிம்மம்

நீங்கள் இந்த காலகட்டத்தில் பணம் தொடர்பான எந்த பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம்.

உங்களின் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கன்னி

உங்களுக்கு இந்த வாரம் வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும். வேலையில் மிகவும் பிசியாக இருப்பீர்கள்.

வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும், எனவே ஆரோக்கிய விடயத்தில் கவனக் குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியு ம் நிலவும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மாற்றத்திற்கான நேரம் இதுவாகும். பதவி உயர்வையும் பெறலாம்.

விருச்சிகம்

நீங்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம்.

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள்.

வேலையில் இருப்பவர்களுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும்.

தனுசு

உங்கள் மனம் சில காரணங்களால் அலைக்கழிக்கப்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் குறையும்.

வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். திட்டமிட்டு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.

மகரம்

உங்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் பெற்றோருடனான உறவு மேம்படும்.

தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சாதகமாக இருக்கும்.

கும்பம்

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கை துணையின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள்.

கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். வேலையில் இந்த வாரம் சாதாரணமாக இருக்கும்.

மீனம்

உங்களின் கடின உழைப்பு இந்த கால கட்டத்தில் வெற்றிபெறும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

நிதி பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும். எந்த வேலையையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024