புற்றுநோய்க்கு விரைவில் தீர்வு காண்போம் – விளாடிமிர் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் முனைப்புடன் தங்கள் விஞ்ஞானிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகள் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் தீவிர ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் தொற்றின்போது ஸ்புட்னிக் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா, புற்றுநோய்க்கு தீர்வு காணும் முயற்சியில் நெருங்கி விட்டதாக தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோ மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், ‘புதிய தலைமுறையின் புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் Immunomodulatory மருந்துகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும்.

அவை தனிப்பட்ட சிகிச்சை முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!