சொந்த மண்ணில் தோல்வியுற்றதற்கு ரோஹித் ஷர்மா கூறிய காரணம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் நடந்தது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களும், இந்தியா 436 ரன்களும் எடுத்தன.

பின்னர் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து 420 ரன்கள் குவித்தது.

ஓலி போப் (Ollie Pope) 196 ரன்கள் விளாசினார். பும்ரா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 231 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஹார்ட்லியின் சுழலில் சிக்கி 202 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில்,

“எங்கே தவறு நடந்துள்ளது என்பதை குறிப்பிடுவது கடினம். ஒரு அணியாக நாங்கள் தோல்வியை தழுவியுள்ளோம்.

நாங்கள் போதுமான அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. சிராஜ், பும்ரா இணைந்து போட்டியை 5வது நாளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று விரும்பினேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!