பணப்பெட்டிக்கு ஐடியா போட்ட விஷ்னு! இன்னொரு என்ட்ரி

பிக் பாஸ் வீட்டிற்கு புதிய என்ட்ரி ஒன்று வந்துள்ளது

இந்நிலையில் சின்ன மருமகள் என்ற புதிய சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் என்ட்ரி உள்ளே கொடுத்துள்ளனர்.

இந்தியா பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்றுள்ளார். தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சின்ன மருமகள் சீரியலின் ப்ரொமோ காட்சியினை பிக்பாஸில் வெளியிடுவதற்கு குறித்த சீரியலில் நடித்த நடிகர், நடிகை உள்ளே வந்துள்ளனர்.

உள்ளே வந்த நடிகர் விஷ்ணுவிடம் கொளுத்தி போட்ட நிலையில், விஷ்னு பணப்பெட்டியை எடுத்து கிளம்பி இருப்பேன் என்று சக போட்டியாளரிடம் புலம்பிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!