விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு 2024! வெற்றி யாருக்கு?

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் யார் வெல்ல போகிறார்கள் என்பது வரும் சனிக்கிழமை தெரிந்துவிடும்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி காலாமானார். இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுடன் அறிவிக்காமல் இந்த தேர்தல் தனியாக அறிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர்.

இந்ததேர்தலில் தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததால், தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 8-ந் தேதி மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 பேர் தகுதிவாய்ந்த வாக்களர்கள் இருந்தனர்.

இவர்கள் வாக்களிக்க 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்த சச்சரவும் இல்லாமல் தொடங்கியது. காலையில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மதியம் வெயிலின் தாக்கத்தால் குறைந்து இருந்தது.

ஆனால் மாலையில் அதிகமான மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவானது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் எப்படியாவது வென்று திமுகவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாமக நினைக்கிறது. இது சாத்தியமா இல்லை வழக்கம் போல் திமுக வெல்லுமா என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!