விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம்!

நடிகர் விஜயின் கட்சியான, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக, செல்போன் செயலியை அறிமுகம் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தில், 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி வரும் புதன் அல்லது வியாழன் அன்று அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான செயலி மற்றும் பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!