விஜய் கட்சி நிர்வாகிகள் எடுத்த உறுதிமொழி! வெளியானது புகைப்படம்

நடிகர் விஜய் அரசியல் கட்சியின் உறுதிமொழி அறிக்கை குறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் இன்று காலை 9 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக வெற்றிக் கழக தோழர்களின் உறுதிமொழி என்ற கார்ட் ஒன்று நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது

.

அதில், “நாட்டின் விடுதலைக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் தீரத்துடன் போராடிய வீரர்களின் தியாகத்தைப் போற்றுவேன். மொழிப்போர் தியாகிகள் இலக்கை நிறைவேற்றப் பாடுபடுவேன். மக்கள் நலச் சேவகராகப் பணியாற்றுவேன். சாதி, மதம் போன்ற வேறுபாடுகளைக் களைந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைபிடிப்பேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!