பாஜகவில் இணைந்தார் விஜயதரணி! சொன்ன காரணம்

காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ விஜயதரணி இன்று பாஜகவில் இணைந்தார்.

கடந்த சில நாட்களாகவே டெல்லியில் முகாமிட்டு வந்த கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்பியாக இருந்த வசந்தகுமார் மறைந்த நிலையில், அங்கு விஜயதரணி போட்டியிட முயன்றார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனால், காங்கிரஸ் தலைமை மீது விஜயதரணி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

மேலும், இந்த முறை கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட விஜய்தரணி காங்கிரஸில் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் மீண்டும் விஜய்வசந்துக்கே சீட் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதனால், அதிருப்தியில் இருந்த அவருக்கு, இந்த தகவல் வேலும் அதிருப்தியை அளித்துள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், இன்று அவர் பாஜகவின் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அதன்பின் பேசிய அவர், “நாட்டிற்கு மோடியின் தலைமை அவசியம். பாஜகவில் பெண்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!