இறுதியாக பணிந்தார் விஜய்! கட்சி பெயரில் மாற்றம்?

நடிகர் விஜய் இறுதியாக தனது கட்சிப் பெயரில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார்.

அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவரது கட்சிப் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ‘வெற்றி’ என்று வரும் இடத்தில் ‘க்’ வர வேண்டும். அப்போதுதான் அது சரியான தமிழ் வார்த்தை என்று தமிழ் அறிஞர்கள் பலர் கூறி வந்தனர்.

ஆனால், விஜய் அதன்பின் வெளியிட்ட அறிக்கையில்கூட, ‘தமிழக வெற்றி கழகம்‘ தான என குறிப்பிட்டிருந்தார். இதனால், சிலர் இதைக் கூட திருத்துவதற்கு விஜய்க்கு மனம் வரவில்லை. அப்புறம் எப்படி இவர் தமிழ்நாட்டு மக்கள் சொல்வதை கேட்கப்போகிறார் என்றெல்லாம் சீண்டினர்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த ‘க்’ என்ற வார்த்தையை சேர்த்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என விஜய் பெயர் மாற்றியுள்ளாராம்.

இதைப் பற்றிய தகவல் அடுத்த விஜய்யின் அறிக்கையில் இருக்கும் என்கின்றனர் விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!