நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள்!

2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில், நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

அதில், 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 20 பெண் வேட்பாளர்களில் ஒருவராக வீரப்பனின்மகள் வித்யா கிருஷ்ணகிரி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.

கட்சியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேடையில் வேட்பாளராக வித்யா அறிவிக்கப்பட்ட போது, தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது ஐயா “வனம் காக்க போராடினார்”, “இனம் காக்க நானும், என் மகளும் போராடுகிறோம்” என சீமான் தெரிவித்தார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!