தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!

வேட்டி சட்டையில் WWE வீரர் உட்கார்ந்து இருப்பது போல தாய்லாந்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு தாலி கட்டிய நிலையில், மணக்கோலத்தில் மாப்பிள்ளை நிக்கோலாய் சச்தேவ் தனது மனைவியுடன் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவின் மெஹந்தி, சங்கீத் மற்றும் ரிசப்ஷன் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், திருமணம் தாய்லாந்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நிக்கோலாய் சச்தேவ் தனது மனைவி வரலட்சுமி சரத்குமாருக்கு தாலி கட்டிய தருணங்களும் சரத்குமார், சாயா தேவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அட்சதை போட்டு மணமக்களை வாழ்த்தும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு ரெட் கலர் தான் சூட் ஆகும் என தனுஷ் சொல்வது போல வரலட்சுமி சரத்குமார் தனது திருமணத்தை முன்னிட்டு சிகப்பு நிற பட்டுச் சேலை அணிந்துக் கொண்டு மணமகளாக அந்த பெரிய குடும்பத்தின் கூட்டத்தில் தனித்துவமாக தெரியும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அவரது பட்டுச் சேலை பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறுகின்றனர்.

பெரிய மண்டபம் எல்லாம் எடுத்து திருமணம் செய்யாமல், தாய்லாந்தில் கடற்கரை அருகே மணமேடை செட் போட்டு ட்ரீம் வெட்டிங்கை நடத்திய வரலட்சுமி சரத்குமார் அங்கேயும் மாடர்ன் உடையை அணிந்துக் கொண்டும் ஒரு ரிசப்ஷனையும் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Related posts

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!

விஜயகாந்த் இறப்பிற்கு அஜித் வராதது ஏன்? மீசை ராஜேந்திரன் விளக்கம்!