இலங்கையில் களைகட்டிய காதலர் தினம்! அமோக விற்பனை

இலங்கையில் காதலர் தினமான நேற்று 2 மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகெங்கும் நேற்று(பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினம் என்றாலே முதலில் காதல் ஜோடிகள் நினைவுக்கு வருவது ரோஜா பூ தான், அப்படிப்பட்ட அந்த ரோஜா பூவுக்கு கடந்த 2 நாட்களாக படு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனால், தனி ஒரு ரோஜா பூ ரூ.300ல் இருந்து ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரோஜா மலர் கொத்து ரூ.3000ல் இருந்து ரூ.6000 வரை விற்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த ஆண்டு ரோஜா பூவில் மட்டும் விற்பனை சுமார் ரூ.1200 கோடி வருமானம் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வருகின்றனர்.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடும்போது ரோஜா பூ இந்த ஆண்டு 100% அதிகமாக விற்பனையாகியுள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!