23 வயதில் நீதிபதியான பழங்குடியின பெண்ணுக்கு வாழ்த்து கூறிய வைரமுத்து

தமிழகத்தில் 23 வயதில் நீதிபதியான பழங்குடியின பெண்ணுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் TNPSC தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 23 வயது பெண் ஸ்ரீபதி வெற்றி பெற்றிருந்தார்.

திருமணமான இவர் குழந்தை பிறந்த பின்னர் தேர்வு எழுதியுள்ளார். இந்த சிவில் நீதிபதியாக தெரிவான இவர் அமரவிருக்கிறார்.

இதன்மூலம் நீதிபதியாகும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை ஸ்ரீபதி பெற்றார்.

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘இரும்பைப் பொன்செய்யும்

இருட்கணம் எரிக்கும்

சனாதன பேதம் சமன் செய்யும்

ஆதி அவமானம் அழிக்கும்

விலங்குகட்குச் சிறகுதரும்

அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்

விளக்குமாறு விளங்கிய கையில் செங்கோல் வழங்கும்

கல்வியால் நேரும் இவையென்றும் காட்டிய பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி

உன் முறுக்கிய முயற்சியில் இருக்கிற சமூகம் பாடம் கற்கட்டும்.

வளர்பிறை வாழ்த்து! ‘ என கூறியுள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!