போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா – இஸ்ரேல் அவசர ஆலோசனை

இஸ்ரேலுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்கள் காரணமாக, தற்காலிக போர் நிறுத்தம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
32வது நாளாக தொடரும் தாக்குதல் காரணமாக இதுவரை 10,000க்கு அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் போர் நிறுத்தம் தொடர்பாக மேற்குலக நாடுகள் உட்பட பல நாடுகளில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள.
இந்நிலையில், ஐநா சபையில் ஜோர்டன் கொண்டு வந்த போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் வெற்றி பெற்ற பின்னரும் இஸ்ரேல் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முயலாததால், காசாவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!