ராகு கேது பெயர்ச்சியால் எதிர்பாராத ஜாக்பாட் யாருக்கு?

தமிழ் புத்தாண்டில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்வார். கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்வார். குரோதி தமிழ் புத்தாண்டில் குரு பகவான் பார்வையால் சிலருக்கு வீடு தேடி ஜாக்பாட் வரப்போகிறது.

துலாம்:

உங்களுடைய ராசிக்கு எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு ஆகிய ஸ்தானத்தில் ராகு குரோதி ஆண்டு முழுவதும் பயணம் செய்வதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். ஜென்ம கேதுவாலும் பாதிக்கப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும்.

விருச்சிகம்:

ராகு உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்திலும் கேது லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்வார்கள். 18 ஆண்டுகளுக்கு ஓருமுறை இந்த ஸ்தானங்களில் ராகு கேது பயணம் செய்கின்றனர்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே, ராகு கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திலும், கேது 10இடத்திலும் பயணம் செய்கின்றனர். தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள்.

மகரம்:

ராகு மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.

கும்பம்:

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, குரோதி ஆண்டு முழுவதும் ராகு 2ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம், பணம் கையிருப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள், வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, வரும். நல்ல வேலை கிடைக்கும்.

மீனம்:

ராகு உங்களுடைய ராசியிலும் கேது ஏழாம் வீட்டிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்கின்றனர். குரோதி தமிழ் புத்தாண்டில் ஜென்ம ராசியில் பயணம் செய்யும் ராகு நல்லதொரு இடமாற்றத்தை தரப்போகிறார். ஏழாம் வீட்டில் உள்ள கேதுவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024