ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட இரு பெண்கள்!

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி உட்பட ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார்.அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம்காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்தனர்.

அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரும் நேற்றுமுன்தினம்(1) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தராஜாவின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!