அமெரிக்க பாப் பாடகியின் deepfake புகைப்படத்திற்கு ட்விட்டர் முற்றுப்புள்ளி

டெய்லர் ஸ்விப்ட் குறித்த தேடல் முடிவுகளை எக்ஸ் சமூக வலைத்தளம் தடை செய்துள்ளது.

அமெரிக்க பாப் பாடகியான டெய்லர் ஸ்விப்ட்டின் deepfake புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள், டெய்லர் ஸ்விப்ட்டுக்கு ஆதரவாக Protect Taylor Swift என்கிற குறிச்சொல்லோடு அவரது நேர்மறையான படங்களைப் பகிரத் தொடங்கினர்.

இந்த நிலையில், எக்ஸ் தளம் டெய்லர் ஸ்விப்ட்டின் தவறான புகைப்படங்களை கட்டுப்படுத்த, அவர் குறித்த தேடல் முடிவுகளை தடை செய்துள்ளது.

அத்துடன் டெய்லர் ஸ்விப்ட் AI என குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் தேடுபவர்களுக்கு, ”Something went wrong. Try reloading.” என்பதுடன் இணைத்து காண்பிக்கப்பட்டது.

எக்ஸ் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் பிரிவு தலைவர் ஜோ பெனாரோச் கூறுகையில், ‘தேடல் மீண்டும் செயல்பாட்டில் உள்ளது. எங்களது கண்காணிப்பைத் தொடரவுள்ளோம். அதுபோன்ற படங்கள் பகிரப்பட்டால் அதனை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

34 வயதாகும் டெய்லர் ஸ்விப்ட் Valentine’s Day, Amsterdam, The Lorax உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!