தாக்குதலை சமாளித்து சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் டிராவிஸ் ஹெட் 7வது சதத்தினை பதிவு செய்தார்.

அடிலெய்டில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

ஸ்டீவன் ஸ்மித் (12), லபுஷேன் (10), கேமரூன் கிரீன் (14) ஆகியோர் ஷாமர் ஜோசப்பின் தாக்குதல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய கவாஜா 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அவுஸ்திரேலியா ரன் எடுக்க திணறிய நிலையில், டிராவிஸ் ஹெட் அதிரடியில் கலக்கினார்.

வேகப்பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்ட அவர் சதம் விளாசினார்.

இது அவருக்கு 7வது டெஸ்ட் சதம் ஆகும். மேலும் அடிலெய்டில் அடித்த இரண்டாவது சதம் ஆகும்.

தொடர்ந்து ஆடிய ஹெட் 119 (134) ரன்களில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!