உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் டிரான் அலஸ் வெளியிட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் பொலிஸாரின் குறைபாடுகள் காரணமாகவே நடத்தப்பட்டதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் தக்க தருனத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சஹ்ரான் உள்ளிட்டவர்களை கைது செய்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தரப்பில் பாரிய கவனயீன குறைப்பாடு ஏற்பட்டமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் யுக்திய நடவடிக்கை எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டின் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 17 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றுக்கும், சட்டத்தரணிகளுக்கும் தேவையானவாறு தாம் செயற்பட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை நிறுவனங்களை தாம் கண்டுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!