இராணுவ ஆட்சேர்ப்பின் போது நேர்ந்த சோகம்! 37 இளைஞர்கள் மரணம்

காங்கோ குடியரசின் பிரஸ்ஸாவில்லே (Brazzaville) நகரில் இராணுவ ஆட்சேர்ப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 37 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
காங்கோ குடியரசு வறுமையில் உழலும் நாடு.
அங்கே வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.
உலக வங்கியின் கூற்றுப்படி 5.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காங்கோவில் சுமார் 75% மக்கள் முறைசாரா மற்றும் சுயதொழில், குறைந்த உற்பத்தி திறன் கொண்ட வேலைகளில் உள்ளனர் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் காங்கோ அரசு, பிரஸ்ஸாவில்லேவில் உள்ள ஒரு மைதானத்தில், 18 முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்களில் 1500 பேரை ஆட்சேர்ப்பு மூலம் இராணுவத்திற்கு தேர்ந்தெடுப்பதாக அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த மைதானத்தில் முதல் நாள் இரவே இளைஞர்கள் குழுமினர்.
கூட்டம் அதிகமாகிக்கொண்டே சென்றதால் நெரிசலில் சிக்கி 37 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!