தைப்பூச திருவிழாவில் நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் தைப்பூச திருவிழாவின்போது திடீரென தேர் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று தைப்பூச திருவிழா தமிழகம் மட்டுமன்றி உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.

அதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பொன்மலை ஆண்டவர் திருக்கோவிலிலும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு தைப்பூச நாளிலும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று தேரோட்டம் தொடங்கியபோது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் சுவாமியின் தேரை வடம்பிடித்து இழுத்து “அரோகரா” என கோஷமிட்டனர்.

கோவில் வீதியில் தேர் உலா வந்தபோது குழிக்குள் அதன் சக்கரங்கள் இறங்கின.

இதனை அறியாமல் பக்தர்கள் தேரை வளைவில் திரும்பினர்.

அப்போது தேர் சரிந்து கீழே கவிழ்ந்தது. இதை கவனித்த பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

இதனைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேர் மீட்கப்பட்டது.

இச்சம்பவத்தில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பக்தர்களிடம் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!