நாளை சிவப்பு நிறத்தில் எரியும் தாமரை கோபுரம்! இதுதான் காரணம்

கொழும்புவில் உள்ள சிவப்பு கோபுரம் நாளை(பிப்ரவரி 22) சிவப்பு நிறத்தில் எரியும் என்று தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை சர்வதேச மூளையழற்சி நோய் தினத்தை முன்னிட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், என்செலாலிடிஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

இது ஆபத்துமிக்க நோய் என்பதால், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, இதன்மூலம் சிலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று அந்த அமைப்பு நம்புகிறது.

மேலும், கொழும்பு தாமரை கோபுரம் இந்த ஆண்டு சர்வதேச மூளையழற்சி தினத்தை உண்மையிலேயே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உலகெங்கிலும் உள்ள பலருடன் இணைந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் என தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் கூறியுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!