இன்றைய ராசிபலன்: 5 மே , 2024

குரோதி வருடம் சித்திரை மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.05.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

விவகாரங்களை வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்ல தவறாதீர்கள்.

உயர் அதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள்.

வியாபாரிகள் எதிர்பார்த்த லாபமடைய மாட்டீர்கள்.

ரிஷபம்

போட்டி பந்தயங்களில் சாதகமான நிலையை அடைவீர்கள்.

ஷேர் மார்க்கெட் தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.

ரியல் எஸ்டேட் பிசினஸில் நல்ல லாபம் பார்ப்பீர்கள்.

மிதுனம்

வியாபாரத்திற்கான உதவிகள் வீடு தேடி வருவதால் சந்தோஷப்படுவீர்கள்.

எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்கள்.

நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள்.

கடகம்

தொழில் செய்யும் இடத்தில் ஏதாவது பிரச்சனைகள் தலை தூக்குவதால் தடுமாற்றம் அடைவீர்கள்.

இயந்திரங்களில் எச்சரிக்கையாக வேலை செய்யாவிட்டால் ரத்த காயம் படுவீர்கள்.

வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி தூக்கம் இழப்பீர்கள்.

சிம்மம்

இடையூறுகள் ஏற்படும் வேலைகளை வீம்புக்காக செய்யாதீர்கள்.

அதனால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

வெளியூர் பயணங்களை ஒத்திப் போடுவீர்கள்.

கன்னி

நல்ல செய்திகளால் குடும்பத்தில் கலகலப்பை கூட்டுவீர்கள்.

தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு வந்து சேமிப்பை உயர்த்துவீர்கள்.

வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள்.

துலாம்

ஊக்கமான முயற்சியால் வியாபாரத்திலிருந்த தேக்கங்களை விலக்குவீர்கள்.

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.

புதிய சரக்குகளை இறக்குமதி செய்வீர்கள். பழைய கடன்களை அடைக்க பாடுபடுவீர்கள்.

விருச்சிகம்

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பால் சோர்வு அடைவீர்கள்.

கூட இருந்து குழி பறிக்க சிலர் செய்யும் முயற்சியில் மாட்டிக் கொள்வீர்கள்.

தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.

தனுசு

குடும்பம் ஒற்றுமைக்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

வீடு கட்ட மனை இடம் வாங்குவீர்கள்.

பணப்பற்றாக்குறை அறவே நீங்கி ஆனந்தம் அடைவீர்கள்.

மகரம்

புதிய திட்டங்களால் தொழிலை மேம்படுத்த விரும்புவீர்கள்.

சகோதர சகோதரிகள் உதவியால் சந்தோஷம் அடைவீர்கள்.

தாமதமான அரசாங்க வேலைகளை சாதகமான நிலைக்கு கொண்டு வருவீர்கள்.

கும்பம்

அண்டை அயலாரிடம் இருந்த கருத்து வேறுபாட்டை அன்பாக பேசி அகற்றுவீர்கள்.

உயரதிகாரிகள் கொடுக்கும் உற்சாகத்தால் கடினமான வேலையை சுலபமாக பார்ப்பீர்கள்.

மீனம்

மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

சூட்சுமங்களை கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024