இன்றைய ராசிபலன்: 4 ஏப்ரல், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 22 ஆம் தேதி வியாழக்கிழமை 04.04.2024 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

தாமதமான காரியத்தை தடாலடியாக நடத்துவீர்கள். அரசாங்க வேலைக்கு அப்ளிகேஷன் போடுவீர்கள். சகோதர சகோதரிகளின் தொந்தரவால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்கள்.

ரிஷபம்

துணிவோடு தொழிலை நடத்தி போட்டியாளர்களை பொறாமைப்பட வைப்பீர்கள். பழுதான மின்சார சாதனங்களை ரிப்பேர் செய்வீர்கள். வியாபாரத்திற்காக வங்கியில் இருந்து பணம் பெறுவீர்கள்.

மிதுனம்

வெட்டித்தனமாக பேசி வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். பிறந்த வீட்டுக்கு கோபத்தில் சென்ற மனைவியை சமாதானப்படுத்தி கூட்டி வருவீர்கள். தந்தையாரின் மூட்டு வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பீர்கள்.

கடகம்

நீண்ட நாள் பகையை விலக்கி உறவுகளை பலப்படுத்துவீர்கள். சாதுர்யமாகப் பேசி மனைவியைச் சமாளிப்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சிம்மம்

ஒதுங்கி போனாலும் உறவுகளின் தொல்லைக்கு ஆளாவீர்கள். மனத்திண்மையால் அதை முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற கடினமாக உழைப்பீர்கள்.

கன்னி

ஏதோ ஒரு மனக் கவலையால் இரவில் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். வியாபாரத்தில் இடையூறுகளை சந்திப்பீர்கள். தொழிலில் முன்னேறி மரியாதையை அதிகரிப்பீர்கள்.

துலாம்

மடை கடந்த வெள்ளம் போல் பலவகையில் வருமானம் பெறுவீர்கள். வாகனங்களுக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள். பூர்வீகச் சொத்தை அடைய தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

விருச்சிகம்

பழைய நண்பர்களின் வருகையால் மனம் குதூகலித்து மகிழ்வீர்கள். மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவீர்கள். திருமண பேச்சு வார்த்தைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.

தனுசு

தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். ஏழை எளியோருக்கு உதவுவீர்கள். வெளி வட்டாரங்களில் உங்களின் புகழை அதிகரிப்பீர்கள். எதிர்ப்புகளை இருந்த இடம் தெரியாமல் விரட்டுவீர்கள்.

மகரம்

வாகனங்கள் பழுதாகி குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். மனைவி மக்களின் ஆசையை நிறைவேற்ற ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.

கும்பம்

வாகனங்களில் போகும்போது அலட்சியம் காட்டாதீர்கள். மோட்டார் சைக்கிளில் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல மறக்காதீர்கள். ஞாபக மறதியால் நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள்.

மீனம்

பங்குச்சந்தையில் முதலீடு செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை நல்ல முறையில் நடத்துவீர்கள். வாங்கிப்போட்ட நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024