இன்றைய ராசிபலன்: 29 ஏப்ரல், 2024

குரோதி வருடம் சித்திரை மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 29.04.2024 சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வெளிநாடு சென்றவர்கள் சொந்த நாடு திரும்புவீர்கள்.

குழுவில் கிடைக்கும் பணத்தை பெண்கள் கணவனுக்கு கொடுப்பீர்கள்.

ஆலயத் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள்.

ரிஷபம்

எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.

நல்ல நண்பராக இருந்தாலும் சாட்சி வைத்து பணத்தைக் கொடுங்கள்.

கேஷ் கவுண்டரில் வேலை செய்பவர்கள் கவனத்துடன் செயல்பட தவறாதீர்கள்.

மிதுனம்

தடைபட்ட திருமண வேலை முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

வேலையிடத்தில் உயரதிகாரிகள் உற்சாகம் கொடுப்பார்கள்.

தடங்கல் இல்லாமல் அரசு உதவியை பெறுவீர்கள்.

கடகம்

வீம்பாக எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள்.

அன்பானவர்கள் கூட அம்பாக மாறி குத்துவார்கள்.

தொழில்துறைகளில் இறக்கமான நிலையை காண்பீர்கள்.

சிம்மம்

எளிய முறையில் வியாபாரம் செய்து பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

பிள்ளைகளின் கல்வித் திறனால் பெருமையடைவீர்கள்.

கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி

அன்னையின் ஆசியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள்.

எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைத்து பரவசமடைவீர்கள்.

அரசாங்க வேலையில் சேருவீர்கள்.

துலாம்

அதிரடியான முயற்சிகளில் இறங்குவீர்கள்.

அதற்குரிய பலன் குறைவாக கிடைத்தாலும் திருப்தி அடைவீர்கள்.

சகோதர உறவுகளால் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள்.

விருச்சிகம்

நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள்.

தடைபட்ட வீட்டு வேலைகளை மளமளவென நடத்துவீர்கள்.

பங்குச்சந்தை வியாபாரத்தில் சிறப்பான நிலையை எட்டுவீர்கள்.

தனுசு

எளிதில் முடிய வேண்டிய காரியம் இழுபறியாக இருப்பதால் டென்ஷன் ஆவீர்கள்.

வேலையில் கவனமாக இல்லாவிட்டால் அரசு ஊழியர்கள் தண்டனைக்கு ஆளாவீர்கள்.

மகரம்

இல்லத்தரசிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவீர்கள்.

உடல் ரீதியாக சின்னச் சின்ன உபாதைகளைச் சந்திப்பீர்கள்.

கும்பம்

தைரியமாகச் செயலாற்றி தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

திட்டமிட்டபடி தொழில்துறைகளை லாபமாக நடத்துவீர்கள்.

நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள்.

மீனம்

போட்டி பந்தயங்களில் அபார வெற்றி பெறுவீர்கள்.

மாணவர்களின் சாதனையால் கல்லூரிகளில் பாராட்டப்படுவீர்கள்.

எதிர்பாராத பண வரவால் சேமிப்பை உயர்த்துவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024