இன்றைய ராசிபலன்: 27 மார்ச், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை 27.03.2024, சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

மனைவியின் பங்காக சிறிய சொத்து ஒன்றை நீங்கள் பெறுவீர்கள்.
எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கம் இழப்பீர்கள்.
ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்

காணாமல்போன பொருளை தேடி கண்டு பிடிப்பீர்கள்.
வயிற்றுக்கோளாறுக்காக மருத்துவச் சிகிச்சை செய்வீர்கள்.
வெளியூரில் சந்திக்க வேண்டிய நபர்களால் பயன் பெறுவீர்கள்.

மிதுனம்

வருமானத்திற்கு இடையூறாக இருந்த தடைகளை அகற்றுவீர்கள்.
மனதில் தைரியமும் வேகமும் அதிகரித்து வியாபாரத்தை விருத்தி செய்தீர்கள்.
சகோதர வகையில் ஆதாயம் அடைவீர்கள்.

கடகம்

தென்னைமரதோப்பு குத்தகைகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள்.
பணப்பயிர்களை நடவு செய்து விற்பனையில் சாதனை படைப்பீர்கள்.

சிம்மம்

கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள்.
கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் அடைவீர்கள்.

கன்னி

கடன் சுமை காரணமாக இருந்த மன அழுத்தம் மறைந்து நிம்மதி பெறுவீர்கள்.
புதிய தொழில்களுக்கான வழிமுறைகளை வகுப்பீர்கள்.
பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.

துலாம்

அதிக சிரமப்பட்டு வியாபாரத்தை நடத்துவீர்கள்.
தொழிலை விரிவுபடுத்த இரவுத் தூக்கத்தை தொலைப்பீர்கள்.
எதிர்பார்த்த அரசாங்க வேலைகள் தாமதமாகவே நடப்பதால் தளர்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்

வாகனங்கள் பழுதாகி எதிர்பாராத செலவை செய்வீர்கள்.
வீடு கட்டும் வேலைகளில் சுணக்கத்தை காண்பீர்கள்.
ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலையால் சங்கற்றப்படுவீர்கள்.

தனுசு

திடீர் பணவர வந்து முக்காடி நிற்பீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் பார்ப்பீர்கள்.
வாகன விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்

தொலைதூரப் பயணங்களால் குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள்.
மேற்படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள்.
சந்தோசங்களை அனுபவிப்பதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.

கும்பம்

பிள்ளைகளின் வகையில் பெற்றோர்கள் சோதனையைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்சனைகள் உருவாகி வீட்டை ரணகளம் ஆக்குவீர்கள்.

மீனம்

அதிக அலைச்சல் காரணமாக உடல் சோர்வு அடைவீர்கள்.
வேளாவேளைக்கு உணவருந்தக் கூட நேரம் கிடைக்காமல் சிரமப்படுவீர்கள்.
வெளியூர்ப் பயணங்களால் பயன் அதிகம் பெற மாட்டீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024