இன்றைய ராசிபலன்: 26 மார்ச், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 26.03.2024. சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை அடைய மாட்டீர்கள்.

கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் பெறுவீர்கள்.

ஆன்லைன் வர்த்தகங்களில் அவசரம் காட்டாதீர்கள்.

ரிஷபம்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை செய்வீர்கள்.

தகுந்த நேரத்தில் தாய்மாமன் உதவியை பெறுவீர்கள்.

காதலியுடன் வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள்.

மிதுனம்

விளையாட்டாக வாங்கிப்போட்ட நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள்.

புதிய ஆர்டர்கள் மூலம் நல்ல கமிஷன் பெறுவீர்கள்.

நீங்கள் கேட்ட பொருளை வெளிநாட்டில் இருந்து உங்கள் நண்பர் மூலம் பெறுவீர்கள்.

கடகம்

பகல் இரவு பார்க்காமல் குடும்பத்திற்குப் பாடுபடுவீர்கள்.

மனைவி எடுத்தெறிந்து பேசுவதால் மனம் துன்பப்படுவீர்கள்.

பூர்வீகச் சொத்தை பாகப்பிரிவினை செய்யும்படி சகோதரரால் வற்புறுத்தப்படுவீர்கள்.

சிம்மம்

வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கிப் போடுவீர்கள்.

இடம் வாங்கி மாற்றி விடுவதன் மூலம் இருமடங்கு லாபம் பார்ப்பீர்கள்.

உழைப்பால் உயரதிகாரிகளின் மனதைக் குளிர வைப்பீர்கள்.

கன்னி

வயிற்றுக் கோளாறால் பயணத்தை தள்ளிப் போடுவீர்கள்.

வியாபாரத்திற்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள்.

தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

துலாம்

அடுத்தவரின் ஆலோசனையைக் கேட்டு அவசரப்பட்டு காரியத்தில் இறங்கினால் அவஸ்தைப்படுவீர்கள் .

ஆன்லைன் விளையாட்டுகளில் உள்ள ஆபத்தை உணர்வீர்கள்.

விருச்சிகம்

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தாய்வழிச் சொத்தை விற்பனை செய்வீர்கள்.

உங்களுக்கு உரிய பங்கு கைக்கு வந்து வீட்டு வேலைகளை முடிப்பீர்கள்.

தனுசு

புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடு செய்வீர்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத லாபம் தேடுவீர்கள்.

வியாபாரப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்

நாக்கும் வாக்கும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.

ஆத்திரப்பட்டுப் பேசி உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள்.

கும்பம்

எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்கலை எதிர்நோக்குவீர்கள்.

வெயிலின் கொடுமையால் உடல்நிலையில் பாதிப்பு அடைவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள்.

மீனம்

வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்குவீர்கள்.

பழைய பாக்கிகளை சிரமப்பட்டு வசூல் செய்வீர்கள்.

வியாபார மந்த நிலையால் கவலைப்படுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024