இன்றைய ராசிபலன்: 25 மார்ச், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை 25.03.2024 சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

அமைதியாக இருந்து செயல்படுவதன் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
இடுப்பு எலும்பு தேய்மான நோய்க்காக மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள்.
வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி எடுப்பீர்கள்.

ரிஷபம்

குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பீர்கள்.
மனைவியின் பேச்சால் மனநிம்மதி இழப்பீர்கள்.
வியாபாரத்திற்கு தேவையான புதிய ஆர்டர்களை பெறுவதில் சிரமப்படுவீர்கள்.

மிதுனம்

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி போடுவீர்கள்.
வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தின் நலனுக்காக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீர்கள்.

கடகம்

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் அடைவீர்கள்.
அந்நிய நாட்டிலிருந்து எதிர்பார்த்த உதவிகளை தாமதமாக பெறுவீர்கள்.

சிம்மம்

வியாபாரத்தில் நல்ல லாபத்தை பார்ப்பீர்கள். தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள்.
ஆன்லைன் வர்த்தகத்தில் அனுகூலமான பலனை பெறுவீர்கள்.

கன்னி

அதிகமாக ஆசைப்படாதீர்கள்.
குழம்பிய மனதில் நிம்மதி இருக்காது.
அடுத்தவர் பேச்சைக் கேட்டு கைப்பொருளை இழந்துவிடாதீர்கள்.

துலாம்

கடல் கடந்து செல்வீர்கள்.
லாபத்தோடு இந்தப் பிரிவை ஏற்படுத்துவீர்கள்.
தக்க நேரத்தில் ஒருவருக்கு உதவி செய்வீர்கள்.
ஆனால் திரும்ப கிடைக்க தாமதமானதால் தடுமாறுவீர்கள்.

விருச்சிகம்

எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை இழப்பீர்கள்.
அதற்காக பணத்தை சேர்க்கச் திட்டமிடுவீர்கள்.
வாங்கிப்போட்ட நிலத்தை விற்று தொழிலில் முதலீடு செய்வீர்கள்.

தனுசு

ஒதுங்கிப் போனவர்கள் தேடி வந்து உறவாடுவார்கள்.
சஞ்சலப்பட்ட மனத்தோடு இருந்த நீங்கள் பெரியோர்களின் சந்திப்பால் தெளிவடைவீர்கள்.
கடந்த கால கசப்பான சம்பவங்களால் பாடம் கற்றுக் கொள்வீர்கள்.

மகரம்

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைப்பீர்கள்.
உடைந்து போன உறவுகளை ஒட்ட வைப்பீர்கள்.
கூட்டாக தொழில் செய்ய ஒப்பந்தம் போடுவீர்கள்.

கும்பம்

வியாபாரத்திற்கு பணம் புரட்ட தடுமாறுவீர்கள்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் சங்கடப்படுவீர்கள்.
பைனான்ஸ் கம்பெனியில் எச்சரிக்கையாக நடப்பீர்கள்..

மீனம்

குடும்பத்தில் இருந்த இறுக்க நிலையை மாற்றி கலகலப்பை உண்டு பண்ணுவீர்கள்.
பிள்ளைகளைப் பற்றிய பெரிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024