இன்றைய ராசிபலன்: 23 மே , 2024

குரோதி வருடம் வைகாசி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 23.05.2024 சந்திர பகவான் இன்று விருச்சிகம் ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

எச்சரிக்கையாக பைக் ஓட்டவில்லை என்றால் விபத்தில் சிக்குவீர்கள்.

அன்புக்குரியவரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய மாட்டீர்கள்.

ரிஷபம்

கணவன் மனைவிக்கிடையே நெருக்கத்தை அதிகரிப்பீர்கள்.

சொத்துக்களில் இருந்த வழக்ககை முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.

நோய் பற்றிய கற்பனையால் கவலைப்படுவீர்கள்.

மிதுனம்

பிள்ளைகளின் உடல்நலப் பாதிப்பால் பதற்றம் அடைவீர்கள்.

உங்களின் கடுமையான போக்கால் உறவுகளில் விரிசலை உண்டாக்குவீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள்.

கடகம்

நிதி நெருக்கடி குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள்.

ஆன்லைன் வர்த்தகத்தில் சாதகமான பலனை பெற மாட்டீர்கள்.

பங்குப் பரிவர்த்தனையில் பாதக நிலையை சந்திப்பீர்கள்.

சிம்மம்

கிடைக்குமா கிடைக்காதா என்று இருந்த பணம் கைக்கு வந்து திக்குமுக்காடி போவீர்கள்.

புதிய தொழில் தொடங்குவீர்கள்.

வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை ஈர்த்து அதிக ஆர்டர்கள் பெறுவீர்கள்.

கன்னி

வெட்டியாக பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவீர்கள்.

வேலையிடத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

மனைவியின் மனதைப் புரிந்து கொண்டு நடப்பீர்கள்.

துலாம்

போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள்.

சொத்து விஷயத்தில் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பை பெறுவீர்கள்.

வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள்.

விருச்சிகம்

கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள்.

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள்.

நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவியை பெற மாட்டீர்கள்.

தனுசு

உடல்நலப் பாதிப்பால் மருத்துவச் செலவு செய்வீர்கள்.

குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டைச் செய்வீர்கள்.

சுவாசப் பிரச்சினையால் சுகவீனம் அடைவீர்கள்.

மகரம்

நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையால் தொழிலை மேம்படுத்துவீர்கள்.

வீடு வாங்க முயற்சி செய்வீர்கள்.

தள்ளாட்டமாக இருந்த தொழிலை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள்.

கும்பம்

குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவீர்கள்.

சகோதரிக்கு பண உதவி செய்வீர்கள்.

மீனம்

இழந்த பொருள்களை திரும்பப் பெறுவீர்கள்.

தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பீர்கள்.

அரசு வகையில் வரவேண்டிய தொகைகளை பெறுவீர்கள்.

பெண்களால் ஆதாயம் அடைவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024