இன்றைய ராசிபலன்: 23 மார்ச், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 10 ஆம் தேதி சனிக்கிழமை 23.03.2024,  சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

பெண்கள் மனக்கவலையால் பாதிக்கப்படுவீர்கள். தொழில் வளர்ச்சி குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரத்தில் சிக்கல்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம்

விவசாயத் தொழிலில் விறுவிறுப்பாக ஈடுபடுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முனைப்புடன் இருப்பீர்கள். வியாபாரத்தில் பொருளாதாரம் முன்னேற்றத்தை பெறுவீர்கள்.

மிதுனம்

குடும்பத்துடன் குதூகலமாக உல்லாசப் பயணம் செல்வீர்கள். வாக்கு வன்மையால் தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள்.

கடகம்

போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் பொருள் நஷ்டம் அடைவீர்கள். பிள்ளைகள் செய்த பிரச்சனைக்காக ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்பீர்கள். கல்யாண காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

சிம்மம்

எடுத்த காரியம் முடிவுக்கு வராமல் ஏமாற்றம் அடைவீர்கள். வீட்டில் கிறுக்குத்தனமாக நடந்து மனைவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். முதலீடுகளை அதிகரித்து போட்டியாளர்களை திணறடிப்பீர்கள்.

கன்னி

கடுமையாக உழைத்தாலும் உயர் அதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். தொழில் உற்பத்தியில் முடக்க நிலையை சந்திப்பீர்கள். வேலை இடங்களில் விபத்துகளில் சிக்குவீர்கள்.

துலாம்

ஆன்லைன் வர்த்தகங்களில் அமோகமான லாபத்தை பெறுவீர்கள். நல்ல காரியங்களுக்கு உதவி செய்வது சமுதாயத்தில் நன்மதிப்பை அடைவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பை பெறுவீர்கள்.

விருச்சிகம்

உறவினர்களின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். நண்பர்களின் ஆதரவால் புதிய தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேகமாக வளர்ச்சி காண்பீர்கள்.

தனுசு

சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். நிலப்பட்டா மாறுதல்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள். காதலிக்கு தேவையான நகைகளை வாங்கிக் கொடுப்பீர்கள்.

மகரம்

அறிமுகம் இல்லாத பெண்களிடம் அதிகம் உறவாடாதீர்கள். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். வெளியில் உள்ள கோபத்தை வீட்டில் காட்டாதீர்கள்.

கும்பம்

தாய்மாமன் வகையில் இருந்த விரிசலை சரி செய்வீர்கள். தடைப்பட்டு நின்ற திருமணப் பேச்சு வார்த்தைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சனைக்கு சாதகமான முடிவை காண்பீர்கள்.

மீனம்

ஆடல் பாடல் போன்ற பொழுது போக்கு அம்சங்களில் நாட்டம் கொள்வீர்கள். வியாபார எதிர்ப்புகளைத் தவிடு பொடியாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வீட்டிற்கு வாங்குவீர்கள்.

 

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024