இன்றைய ராசிபலன்: 2 மே , 2024

குரோதி வருடம் சித்திரை மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை 2.05.2024 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களைச் செய்வீர்கள்.

எதிர்பார்த்ததை விட இருமடங்கு லாபம் சம்பாதிப்பீர்கள்.

ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

ரிஷபம்

தொழிலுக்கான புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.

சிக்கலான வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள்.

வெளியூரிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள்.

திருமணப் பேச்சு வார்த்தையை திருப்திகரமாக முடிப்பீர்கள்.

மிதுனம்

ஆன்லைனில் பணம் அனுப்பும்போது எண்கள் சரிதானா என்பதை இருமுறை பார்த்துக்கொள்ள தவறாதீர்கள்.

மனைவியின் குத்தல் பேச்சால் மனம் உடைந்து போவீர்கள்.

கடகம்

நடக்கும் தொழிலை மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் வியாபாரிகள் விசனம் அடைவீர்கள்.

வெளியூர்ப் பயணங்களை ஒத்தி போடுவீர்கள்.

சிம்மம்

மனைவி மக்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வதால் நிம்மதி அடைவீர்கள்.

வேலைத் திறமையால் உற்பத்தியை அதிகரிப்பீர்கள்.

போட்டி பந்தயங்களில் சாதகமான நிலையை அடைவீர்கள்.

கன்னி

நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாலும் தொல்லைகள் துரத்துவதால் துயரப்படுவீர்கள்.

இருப்பினும் பொருளாதாரத் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

துலாம்

‘என்னடா வாழ்க்கை’ என்று மனச்சோர்வு அடைவீர்கள்.

நன்றி மறந்த மனிதர்கள் மீது கோபப்படுவீர்கள்.

வீட்டில் நகைச்சுவையாகப் பேசுவதை நிறுத்துங்கள்.

விருச்சிகம்

செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள்.

ஷேர் மார்க்கெட் தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள்.

புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும்.

வியாபாரம் அதிகரித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு

குடும்பத்துடன் குதூகலமாக வெளியூர்ப் பயணம் செய்வீர்கள்.

புதிய ஆடை அணிமணிகளை வாங்கி குஷிப் படுத்துவீர்கள்.

உங்களிடம் போட்டி போட நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள்.

மகரம்

உங்களின் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.

பணத் தேவைக்காக கடன் வாங்க தயங்க மாட்டீர்கள்.

சம்பள உயர்வு கிடைத்து சந்தோஷப்படுவீர்கள்.

கும்பம்

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது கண்ணாடி அணிந்து கொள்ள தவறாதீர்கள்.

கண் வலி ஏற்பட்டு கஷ்டப்படுவீர்கள்.

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருங்கள்.

மீனம்

ஏடிஎம் மிஷினில் பணம் எடுத்தாலும் எண்ணிப் பார்க்க மறக்காதீர்கள்.

நகைகளை கண்ட இடத்தில் கழற்றி வைக்காதீர்கள்.

சின்ன பயல்களோடு சவகாசம் வைத்துக் கொள்ளாதீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024