இன்றைய ராசிபலன்: 2 ஏப்ரல், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 02.04.2024 சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் சொந்த நாடு திரும்பவீர்கள். மகளிர் குழுவில் கிடைக்கும் பணத்தை வியாபாரத்திற்கு பயன்படுத்துவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள்.

ரிஷபம்

எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். நல்ல நண்பராக இருந்தாலும் சாட்சி வைத்து பணம் கொடுக்க மறக்காதீர்கள். கேஷ் கவுண்டரில் கவனமாக வேலை செய்யுங்கள்.

மிதுனம்

தடைபட்ட திருமணத்தை நடத்தி வைப்பீர்கள். வேலை இடத்தில் அக்கறையோடு பணி செய்வீர்கள். அரசு வேலைகளை தடங்கல் இல்லாமல் நடத்துவீர்கள்.

கடகம்

வீம்பாக எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். நண்பர்களிடம் போட்டி போடாதீர்கள். வேலைகள் வேகமாக நடக்காததால் வேதனைப்படுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நகராட்சியால் சிரமப்படுவீர்கள்.

சிம்மம்

எளிய முறையில் வியாபாரம் செய்து பெரிய லாபத்தைப் பெருக்குவீர்கள். பிள்ளைகளின் கல்வித் திறனால் பெருமையடைவீர்கள். கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி

அன்னையின் ஆசியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பதவியில் அமர்வீர்கள். அரசாங்க வேலையில் சேருவீர்கள். சுணக்கமாக இருந்த தொழிலை ஏற்றம் காணச் செய்வீர்கள்.

துலாம்

அதிரடியான முயற்சிகளில் இறங்குவீர்கள். அதற்குரிய பலனை குறைவாகவே பெறுவீர்கள். சகோதர உறவால் தொல்லையை சந்திப்பீர்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் சிரத்தையுடன் பணி செய்வீர்கள்.

விருச்சிகம்

நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். தடைபட்ட வீட்டு வேலைகள் மளமளவென நடத்துவீர்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்வீர்கள். தொழில் போட்டிகளை துடைத் தொழிப்பீர்கள்.

தனுசு

எளிதில் முடிய வேண்டிய செயல்கள் இழுபறியாக நடப்பதால் மனம் சஞ்சலப்படுவீர்கள். வேலையில் கவனமாக இல்லாவிட்டால் அரசு ஊழியர்கள் தண்டனைக்கு ஆளாவீர்கள்.

மகரம்

இல்லத்தரசிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதால் மண்டை காய்ந்து போவீர்கள். உடல் ரீதியாக சின்னச் சின்ன உபாதைகளைச் சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகள் அதிகரித்து கவலை அடைவீர்கள்.

கும்பம்

தைரியமாகச் செயலாற்றி தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தொழில்துறைகளை திட்டமிட்டு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள்.

மீனம்

போட்டி பந்தயங்களில் அபார வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் சாதனையால் பெருமைப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு வந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024