இன்றைய ராசிபலன்: 19 மே , 2024

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

ஏதாவது ஒரு மனக்கவலை இதயத்தை அழுத்துவதால் தூக்கம் இழப்பீர்கள்.

தொழிலுக்குத் தேவையான பணத்தை திரட்ட சிரமப்படுவீர்கள்.

குடும்பத்தில் நிலவும் குழப்பமான போக்கால் முடிவு எடுக்க தடுமாறுவீர்கள்.

ரிஷபம்

சிறிய தொழில் தொடங்குவீர்கள்.

அதற்கான அரசாங்கக் கடன் பெறுவீர்கள்.

வெளிவட்டாரப் பழக்கங்களால் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.

மிதுனம்

திடீரென்று பணம் வந்து திக்கு முக்காடி போவீர்கள்.

தொழிலை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.

வீட்டில் மக்கள் செல்வம், மழலைச் சத்தம் கேட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

பெண்கள் நகைகள் வாங்கி சந்தோஷப்படுவீர்கள்.

சகோதர உறவுகள் உதவியால் பிரச்சனையிலிருந்து மீண்டு வருவீர்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் எதிர்பாராத நன்மைகள் அடைவீர்கள்.

தொழிலில் நினைத்ததைவிட லாபம் பெறுவீர்கள்.

வியாபாரம் முன்னேற்றமாக நடப்பதால் பணவரவு அதிகரித்து மன மகிழ்ச்சி கொள்வீர்கள்.

கன்னி

வளர்பிறைச் சந்திரன் என்பதால் நஷ்டங்கள் குறைந்து நிம்மதி அடைவீர்கள்.

சின்னச் சின்னத் தோல்விகளை தாண்டி வருவீர்கள்.

நீர்க்கட்டி பிரச்சினைக்காக மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வீர்கள்.

துலாம்

என்னதான் அக்கறையாக வேலை பார்த்தாலும் மேல் அதிகாரிகள் குறை கூறலுக்கு ஆளாவீர்கள்.

அவர்களை திருப்திப்படுத்த இயலாமல் திண்டாடுவீர்கள்.

தொழிலாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு வராததால் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள்.

விருச்சிகம்

நல்ல காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள்.

நினைத்த இடத்தில் கேட்ட உதவியை பெறுவீர்கள்.

தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு

தொடரும் தோல்விகளை உங்களை விட்டு துரத்துவீர்கள்.

பங்குப் பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டுவீர்கள்.

லாட்டரி யோகமும் பெறுவீர்கள்.

இதமான பேச்சால் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.

மகரம்

வேண்டாதவர்கள் செய்யும் தீங்கால் விசனப்படுவீர்கள்.

பழைய பகையால் பாதிப்படைவீர்கள்.

இருப்பினும் தொழில்துறைகளில் ஏற்றம் காண்பீர்கள்.

பங்கு பரிவர்த்தனைகளில் கணிசமான பலனைப் பெறுவீர்கள்.

கும்பம்

யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள்.

தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள்.

நான் சொல்வதுதான் சரி என்று விவாதம் செய்யாதீர்கள்.

மீனம்

வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்குவீர்கள்.

நகை வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்து குஷிப்படுத்துவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024