இன்றைய ராசிபலன்: 19 மார்ச், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.03.2024இ சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். புதிய தொழிலில் அதிக முதலீடு செய்யாதீர்கள் . அலட்சியமாக இருந்தால் கை காசை இழப்பீர்கள்.

ரிஷபம்

கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள். கணினித் துறைஇ கட்டுமானத் தொழில்இ கமிஷன் வியாபாரத்தில் உச்சம் அடைவீர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள்.

மிதுனம்

எந்தக் காரியத்திலும் நிலையான முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள். பந்தய வியாபாரங்களில் ஈடுபடாதீர்கள். அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள்.

கடகம்

பைனான்ஸ் தொழிலை பக்குவமாக நடத்தவில்லை எனில் பண இழப்பை எதிர்நோக்குவீர்கள். அடுத்தவருக்காக ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

சிம்மம்

விருப்பப்பட்ட பட்டப் படிப்பில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். நண்பர்களின் உதவியால் அனுகூலம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நேரம் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள்.

கன்னி

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தில் பெண்கள் நகை வாங்குவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் நிலையான வருமானம் அடைவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமாக லாபம் பார்ப்பீர்கள்.

துலாம்

எதிர்பாராத தடைகளை நீக்கி புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். வரவு செலவுகளை சொல்லி மனைவியின் மனக்குழப்பத்தை போக்குவீர்கள். மற்றவர்களுக்காக வாதாடாதீர்கள்.

விருச்சிகம்

எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலையை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலால் டென்ஷன் அடைவீர்கள். கடன் வாங்கும் விஷயங்களைத் தள்ளிப் போடுங்கள்.

தனுசு

எதையும் செய்து முடிக்கும் துணிச்சலை பெறுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். தனியார் ஊழியர்கள் உற்பத்தியை பெருக்கி உற்சாகம் அடைவீர்கள்.

மகரம்

ஓய்வில்லாமல் வேலை பார்ப்பதால் உடல் சோர்வடைந்து அவதிப்படுவீர்கள். கண்ட நபர்களுக்கு கடன் கொடுத்து கஷ்டப்படுவீர்கள். வீடு தொடர்பான வேலைகளை விரைந்து பார்ப்பீர்கள்.

கும்பம்

வீட்டில் மங்கல காரியங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணி செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.

மீனம்

வீட்டில் வெடித்த பிரச்சனையால் நிலைகுலைந்து போவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகளை விலக்குவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024