இன்றைய ராசிபலன்: 19 ஜூலை, 2024

குரோதி வருடம் ஆடி மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 19.07.2024 சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள்.

கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்

எதிர்ப்புகள் தொழிலுக்கு இடையூறாக இருந்தாலும் தக்க உதவியின் மூலம் அதைத் தாண்டி வருவீர்கள்.

வேலைப் பளுவை விடா முயற்சியால் முறியடிப்பீர்கள்.

வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள்.

மிதுனம்

மாமனார் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பீர்கள்.

வீடு புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவீர்கள்.

வெளிநாட்டுப் பயணங்களுக்கு முன்னெடுப்பு செய்வீர்கள்.

கடகம்

வெளியிடங்களில் சாப்பிடுவதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள்.

உறவுகளால் உபத்திரவம் அடைவீர்கள்.

தடைகளைத் தாண்டி வெற்றிக்கோட்டை தொடுவீர்கள்.

சிம்மம்

எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள்.

தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்குவீர்கள்.

பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி

விரும்பிய வேலையில் சேர்வீர்கள்.

சம்பள உயர்வால் சந்தோஷம் அடைவீர்கள்.

விவசாய உற்பத்தியை பெருக்குவீர்கள்.

ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள்.

துலாம்

சகோதர உறவுகளால் சந்தோசம் பெறுவீர்கள்.

தக்க சமயத்தில் உதவி பெற்று முக்கிய பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள்.

முந்தி வரும் கோபத்தால் சொந்தங்களை பகைப்பீர்கள்.

விருச்சிகம்

சாதுர்யமாக காய் நகர்த்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

வாக்குத் திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

தனுசு

சொல்வாக்குத் தவறினால் செல்வாக்கை இழப்பீர்கள்.

சிறியோர்களால் அவமானம் அடைவீர்கள்.

போட்டி பந்தயங்களில் இருந்து எட்டி நில்லுங்கள்.

மகரம்

சுப நிகழ்ச்சிக்கான ஆயத்த வேளையில் இறங்குவீர்கள்.

தொழிலை விரிவுபடுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள்.

வியாபாரிகள் விறுவிறுப்பாக விற்பனை செய்வீர்கள்.

கும்பம்

நில விற்பனை மூலம் அதிக வருமானம் பெறுவீர்கள்.

போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள்.

மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டால் மனம் குளிர்ந்து போவீர்கள்.

மீனம்

தந்தையார் வகையில் மருத்துவச் செலவுகள் செய்வீர்கள்.

கடல் கடந்து பயணம் மேற்கொள்வீர்கள்.

விட்டுப் போன உறவுகளை கிட்ட கொண்டு வருவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024