இன்றைய ராசிபலன்: 17 மார்ச், 2024

வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 17) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். காரிய அணுகூலம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவது நல்லது. வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். முன்கோபமின்றி செயல்படவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று நினைத்ததை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் மேம்படும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு எதிர்பாராத சில வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். மற்றவர்களின் பேச்சுக்களை பொறுமையாக கையாளவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்

உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024