இன்றைய ராசிபலன்: 17 மே , 2024

குரோதி வருடம் வைகாசி மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.05.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

பூர்வீகச் சொத்துக்களை பெறுவீர்கள்.

தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் விருத்தி அடைவீர்கள்.

ரிஷபம்

எதிர்பார்த்த வங்கிக் கடனை தடையின்றி பெறுவீர்கள்.

அரசாங்க ஒப்பந்தங்களால் அனுகூலம் அடைவீர்கள்.

கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் எடுப்பீர்கள்.

மிதுனம்

சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள்.

வெளியூர் பயணங்களில் அலைச்சலால் அவதிப்படுவீர்கள்.

வயிற்றுக் கோளாறை சரி செய்ய மருத்துவரை நாடுவீர்கள்.

கடகம்

உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழிலை சிறப்பாக செய்வீர்கள்.

விவசாயிகள் நல்ல லாபம் பெறுவீர்கள்.

தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவீர்கள்.

சிம்மம்

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள்.

கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய மனை இடம் வாங்குவீர்கள்.

கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்காதீர்கள்.

கன்னி

நம்பியவர்களால் தக்க சமயத்தில் ஏமாற்றப்படுவீர்கள்.

பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்வீர்கள்.

டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள்.

துலாம்

தாராளமான பணப்புழக்கத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள்.

விருச்சிகம்

பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள்.

வியாபார விருத்திக்கு பெண்களின் சேமிப்பைப் பெறுவீர்கள்.

தனுசு

மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள்.

மேம்போக்காக இருந்த நீங்கள் சேமிப்பில் நாட்டம் கொள்வீர்கள்.

பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

மகரம்

நீங்கள் உதவி செய்தவர்களால் உபத்திரவம் அடைவீர்கள்.

கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியை முறியடிக்க சிரமப்படுவீர்கள்.

ஐந்தாம் படையினரை அடையாளம் காண்பீர்கள்.

கும்பம்

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள்.

இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

அரசாங்கப் பதவியை அலங்கரிப்பீர்கள்.

மீனம்

நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வதால் மன வேதனைப்படுவீர்கள்.

குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள்.

அகலக் கால் வைக்காதீர்கள்.

கடன் வாங்காதீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024