இன்றைய ராசிபலன்: 17 ஜூலை, 2024

குரோதி வருடம் ஆடி மாதம் 1 ஆம் தேதி புதன்கிழமை 17.07.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

எடுத்த வேலையை முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.

வெளியூர் பயணங்களை ஒத்தி போடுவீர்கள்.

வாகனங்களில் செல்லும்போது கவனத்தை சிதற விடாதீர்கள்.

சாலை சந்திப்புகளைக் கவனமாகக் கடந்து செல்லுங்கள்.

ரிஷபம்

வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்கு உறவினர்களை அழைப்பீர்கள்.

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்வீர்கள்.

தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.

மிதுனம்

உங்கள் தொழிலுக்குத் தேவையில்லாத எதிர்ப்புகளை சந்திப்பீர்கள்.

வியாபாரத்தில் இருந்த போட்டிகளைக் கடந்து வருவீர்கள்.

அரசாங்க வேலையில் பங்கெடுப்பீர்கள்.

கடகம்

கொழுந்தியாளால் குடும்பத்தில் சலசலப்பை சந்திப்பீர்கள்.

தேவையில்லாத பஞ்சாயத்துகளில் இறங்காதீர்கள்.

பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள்.

சிம்மம்

தொட்ட காரியங்களில் எதிர்ப்பு இன்றி ஏற்றம் காண்பீர்கள்.

வியாபாரத்தை அதிகரிக்க திட்டங்கள் தீட்டி வெற்றி அடைவீர்கள்.

எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு பெறுவீர்கள்.

கன்னி

குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடினமாக உழைப்பீர்கள்.

சகோதர வகையில் தேவையில்லாத செலவால் கடன் வாங்குவீர்கள்.

சகோதரிக்கு திருமண ஏற்பாடுகள் செய்வீர்கள்.

துலாம்

ஏற்றுமதி இறக்குமதி தொழிலை லாபகரமாக நடத்துவீர்கள்.

போட்டி பந்தயங்களில் துணிந்து ஈடுபடுவீர்கள்.

ஆன்லைன் வர்த்தகங்களில் அனுகூலம் அடைவீர்கள்.

விருச்சிகம்

அடுத்தவர் பேச்சைக் கேட்டு பைனான்சில் பணம் போடாதீர்கள்.

வியாபாரம் சுமாராக நடக்கும்.

தொழில் துறைகள் மந்தமான நிலையில் காணப்படும்.

தனுசு

வேலை இடத்தில் வீண் பழியைச் சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள்.

கொடுத்த இடத்தில் கடனைத் திரும்ப பெற சிரமப்படுவீர்கள்.

வங்கியில் வட்டி கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

மகரம்

வியாபாரத்தைக் குதூகலமாக நடத்துவீர்கள்.

தொழில் துறைகளில் இருந்த போட்டிகளை சமாளிப்பீர்கள்.

சிக்கனத்தைக் கடைபிடித்து தேவையில்லாத செலவுகளைக் குறைப்பீர்கள்.

கும்பம்

கல்விக் கட்டணம் கட்ட இயலாத ஒருவருக்கு உதவி செய்வீர்கள்.

பங்குச்சந்தையில் கணிசமாக முதலீடு செய்வீர்கள்.

நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அமோக வருமானம் பெறுவீர்கள்.

மீனம்

குடும்பத்துடன் சென்று ஆலய தரிசனம் செய்வீர்கள்.

பெரியோர்களின் நல்லாசியால் இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீர்கள்.

உங்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு மனைவி பிள்ளைகள் நடப்பதால் வேலையில் கவனம் செலுத்துவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024